/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவெக சின்னத்தால் அலர்ஜி: விசிலுக்கு தடை போட்டது தமிழக அரசு? TN Government | Ban whistle blowing
தவெக சின்னத்தால் அலர்ஜி: விசிலுக்கு தடை போட்டது தமிழக அரசு? TN Government | Ban whistle blowing
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் அந்தந்த ஊர்களில் குப்பைகளை சேகரிக்கின்றனர். இதற்காக நிரந்தர அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை போன்ற மாநகராட்சிகளில் தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் குப்பை கையாளப்பட்டு வருகிறது. இதில் வீடு வீடாக செல்லும் தூய்மை பணியாளர்கள், தாங்கள் வந்திருப்பதை உணர்த்தும் வகையில் விசில் பயன்படுத்துவர். அவர்களின் விசில் சத்தம் கேட்டு பொதுமக்களும் குப்பையை எடுத்து வந்து குப்பை வண்டியில் கொட்டுவது வழக்கம்.
பிப் 12, 2026