உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்திய மார்க்கெட்டை வங்கதேசம் ஆக்ரமித்த நிலையில் மாற்றம் | Bangladhesh | Trippur | Textiles

இந்திய மார்க்கெட்டை வங்கதேசம் ஆக்ரமித்த நிலையில் மாற்றம் | Bangladhesh | Trippur | Textiles

நம் அண்டை நாடான வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பின், இந்தியா- வங்கதேசம் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. இருநாடுகள் இடையேயான தரைவழி வர்த்தகத்துக்கு இந்தியா தடை விதித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2வது பெரிய ஆடை ஏற்றுமதியாளராக வங்கதேசம் இருக்கிறது. ஆனால் அங்கு போதுமான சரக்கு விமானங்கள், ஏர்போர்ட் வசதிகள் இல்லாததால், நேரடியாக ஏற்றுமதி செய்வதில் சிக்கல் உள்ளது. இதனால், தரை வழியாக இந்திய நகரங்களுக்கு அனுப்பப்பட்டு இந்தியா மற்றும் பிற வெளி நாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி நடக்கிறது. தடை காரணமாக, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் ஆயத்த ஆடைகள் வரவு பெருமளவு குறைந்து இருப்பதால், இந்திய ஆடை நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை