உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கமலா வெற்றிக்கு துணை நிற்போம்: ஒபாமா | barack obama | michelle | kamala harris

கமலா வெற்றிக்கு துணை நிற்போம்: ஒபாமா | barack obama | michelle | kamala harris

கமலா ஹாரிஸ் விஷயத்தில் மவுனம் கலைத்தார் ஒபாமா! யூகங்களுக்கு முற்றுப்புள்ளி அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சியில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பிரசாரம் தொடர்பான விவாதத்தில் டிரம்ப் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் பைடன் திணறினார். அவரது உடல் நிலையும் பின்னடைவை ஏற்படுத்தியது. பைடனை மாற்ற வேண்டும் என்று ஜனநாயக கட்சியில் பலரும் கூறியதால், அதிபர் போட்டியில் இருந்து அவர் விலகினார். துணை அதிபர் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக நிறுத்த பைடன் ஆதரவு தெரிவித்தார். அடுத்த மாதம் சிகாகோவில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில் அவர் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அதிகரிக்கப்பட உள்ளார். கமலாவுக்கு கட்சி மூத்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தது பல யூகங்களுக்கு வழிவகுத்தது. கமலா ஹாரிசால் டொனால்ட் டிரம்பை வெல்ல முடியாது என ஒபாமா நம்புவதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும், எம்பி மார்க்கெல்லியை வேட்பாளராக நிறுத்த அவர் விரும்பியதாகவும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியானது. இச்சூழலில், ஒபாமாவும், மனைவி மிட்சேலும் கமலா ஹரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்களுடன் கமலா ஹாரிஸ் போனில் பேசும் வீடியோவை ஒபாமா பதிவிட்டுள்ளார்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை