உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அணை அருகே வாழைத்தார் வெட்ட போன தொழிலாளர்களுக்கு சோகம்! Bhavani Sagar Dam | Sathyamangalam | Coracle

அணை அருகே வாழைத்தார் வெட்ட போன தொழிலாளர்களுக்கு சோகம்! Bhavani Sagar Dam | Sathyamangalam | Coracle

பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் ஒத்தை பனை மரக்காடு என்ற இடம் உள்ளது. அணையை ஒட்டிய அப்பகுதியில் சிலர் வாழை பயிரிட்டுள்ளனர். இன்று கோடேபாளையம் கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரின் தோட்டத்தில் வாழைதார் வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதில் 3 தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை வெட்டி மின்மோட்டார் பொருத்தப்பட்ட பரிசலில் ஏற்றினர். 3 பேரும் பரிசலில் ஏறி அணையை கடக்க முயற்சி செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பரிசல் கவிழ்ந்தது. இதில் சக்தி என்பவர் நீந்தி கரை சேர்ந்தனர். சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷ், கோடேபாளையம் மணிகண்டன் நீரில் மூழ்கினர்.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி