உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிபவ் குமார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் சரவெடி | Bibhav kumar | Bail plea | Spreme court | Arvind kej

பிபவ் குமார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் சரவெடி | Bibhav kumar | Bail plea | Spreme court | Arvind kej

டில்லி ஆம் ஆத்மி எம்.பி., ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை, மே மாதம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வன்கொடுமை, கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ஸ்வாதி மாலிவாலுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மூலம், அவர் தாக்கப்பட்டது உறுதியானது. இந்த வழக்கில் ஜாமின் கோரி பிபவ் குமார் தாக்கல் செய்த மனுவை டில்லி ஐகோர்ட் நிராகரித்தது. இதனால் ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், தீபன்கர் தட்டா, உஜால் புயான் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர். முதல்வரின் பங்களா தனியாருக்கு சொந்தமானதா? முதல்வர் அலுவலகத்திற்கு குண்டர்கள் தேவையா?

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை