உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்ரீரங்கத்தில் உள்ள ஈவெரா சிலையை அகற்ற பாஜ புது திட்டம் | BJP | EVR Statue | Srirangam| Kanal kannan

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஈவெரா சிலையை அகற்ற பாஜ புது திட்டம் | BJP | EVR Statue | Srirangam| Kanal kannan

கோயில் முன் ஈவெரா சிலை அகற்ற பாஜ மெகா பிளான் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் ஈவெரா சிலை வைக்கப்பட்டு உள்ளது இந்த சிலை உடைக்கப்படும் நாள்தான் ஹிந்துக்களின் எழுச்சி நாள் என ஹிந்து முன்னணி நிர்வாகியும், திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனருமான கனல் கண்ணன் பேசி இருந்தார். இதுதொடர்பாக தபெதிக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார் அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கோயில் அருகில் உள்ள ஈவெரா சிலை பீடத்தில் கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு எதிரான வாசகங்கள் ஆத்திரமூட்டும் விதமாக உள்ளன எனக்கூறி கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !