உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ தேசிய தலைவர் தேர்வில் மாறும் மோடி - ஆர்எஸ்எஸ் விருப்பம் | BJP | National president election | Mo

பாஜ தேசிய தலைவர் தேர்வில் மாறும் மோடி - ஆர்எஸ்எஸ் விருப்பம் | BJP | National president election | Mo

இப்போது பாஜ தேசிய தலைவராக இருக்கும் நட்டாவின் பதவிக்காலம் முடிந்ததால் அவர் மத்திய அமைச்சராகி உள்ளார். அக்கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முடிந்து, உட்கட்சி தேர்தல் நடக்க இருப்பதால், புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருக்கிறது. கிளை கமிட்டி தலைவர் துவங்கி, மாநில தலைவர்கள் தேர்தல் முடிந்து டிசம்பர் இறுதியில் தேசிய தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் இப்போதே பாஜ புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2014ல் மத்தியில் பா.ஜ அரசு அமைந்தது முதல், கட்சியின் முக்கிய முடிவுகளை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மட்டுமே எடுக்கின்றனர். தேசிய தலைவர் தேர்வு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில முதல்வர்கள் என முக்கியமான தேர்வுகளை இவர்கள் இருவருமே எடுத்தனர். கட்சிக்கு தொடர் வெற்றி கிடைத்து வந்ததால், அவர்களின் முடிவில் மற்றவர்கள் யாரும் தலையிட முடியாத நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஆர்.எஸ்.எஸ்.,சையும் ஆலோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பா.ஜ தேசிய தலைவர் தேர்வு தாமதமாகி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ், மஹாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஆகிய 3 பேரில் ஒருவரை தலைவராக்க, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் விரும்புவதாக கூறப்படுகிறது. தோற்கும் என கணிக்கப்பட்ட ஹரியானாவில், பா.ஜ தொடர்ந்து 3வது முறையாக வென்றுள்ளது. இது அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்த தர்மேந்திர பிரதானுக்கு சாதகமாகியுள்ளது. ஹரியானா வெற்றிக்காக பிரதமர் மோடி, அமித் ஷா மட்டுமின்றி பலரும் தர்மேந்திர பிரதானை பாராட்டுவதால், அவருக்கு தேசிய தலைவர் பதவி என்ற ஜாக்பாட் அடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தெரிகிறது.

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ