கங்கனா கூறியது அவருடைய சொந்த கருத்து என பாஜ விளக்கம்! BJP MP | Kangana Ranaut | Controversial speech
பிரதமர் மோடி 2020ல் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார். விவசாய பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், சேமிப்பு கிடங்குகளில் பராமரித்தல் போன்றவற்றில் விவசாயிகளுக்கு பாதுகாப்பான சில விதிகள் இருந்தன. அந்த விதிகளை தளர்த்தி புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக விவசாயிகள் உணர்ந்தனர். மோடி அரசுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு, புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. வேறு வழி இல்லாமல் மத்திய அரசு 2021 நவம்பர் மாதம் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்தது. தற்போது இந்த சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என நடிகையும், பாஜ எம்பியுமான கங்கனா ரனாவத் பேசி உள்ளார். அவரது பேச்சு சர்ச்சையாகி உள்ளது. கங்கனாவின் இந்த பேச்சு குறித்த வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மோடியும் அவருடைய எம்.பி.க்களும் எப்படி முயன்றாலும், விவசாயிகளுக்கு எதிரான கறுப்பு சட்டங்களை கொண்டு வர விட மாட்டோம் என காங்கிரஸ் கூறி உள்ளது.