லோக்சபாவில் பாஜ எம்பி பரபரப்பு பேச்சு: அமளி துமளி | MP Nishikant Dubey | Bangladesh violence
வங்கதேசத்தவர் ஊடுருவலால் 10 சதவீத பழங்குடிகள் மாயம் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் நடந்து வரும் நிலையில், வங்கதேச அகதிகளுக்கு மேற்கு வங்கத்தில் அடைக்கலம் தர தயார்: அவர்களுக்காக மேற்கு வங்கத்தின் கதவுகள் திறந்திருக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். ஏற்கனவே மேற்கு வங்கம் வழியாக சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்த வங்கதேச முஸ்லிம்களால், நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாகவும் பாஜ குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய முஸ்லிம்களால், ஜார்க்கண்ட்டில் பழங்குடியினத்தவர் எண்ணிக்கை 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே லோக்சபாவில் சொன்னார். ஜார்க்கண்ட்டின் கோட்டா தொகுதி எம்பி நிஷிகாந்த் துபே பேசியதாவது: நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சந்தால் பர்கானா பிராந்தியம் பழங்குடினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். 2000ம் ஆண்டு பீகாரில் இருந்து பிரிந்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவான போது இப்பகுதி ஜார்க்கண்ட்டுடன் இணைக்கப்பட்டது. அப்போது சந்தால் பர்கானாவின் மொத்த மக்கள் தொகையில் 36 சதவீதம் பேர் பழங்குடியினராக இருந்தனர். தற்போது அப்பகுதியில் வெறும் 26 சதவீதம் பேர் மட்டுமே பழங்குடியினர் உள்ளனர். மீதமுள்ள 10 சதவீதம் பழங்குடியினர் எங்கு சென்றனர். அவர்கள் காணாமல் போயுள்ளனர். மேற்கு வங்கம் வழியாக ஜார்க்கண்ட் உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஊடுருவும் வங்கதேச முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.