உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவம் பற்றி நாடு முழுதும் பிரசாரம்: பாஜ கூட்டத்தில் தீர்மானம்

வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவம் பற்றி நாடு முழுதும் பிரசாரம்: பாஜ கூட்டத்தில் தீர்மானம்

#VandeMataram #BJPResolution #Congress #BJP #Modi #NitinNabin # பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் தேசிய அளவிலான நிர்வாகிகள் மாற்றம் நிகழ்ந்தது. புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுடன் கட்சியில் தேசிய தலைவர் நிதின் நபின் டில்லியில் ஆலோசனை நடத்தினார். புதிதாக தேர்வான நிர்வாகிளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவத்தையும், வரலாற்று சிறப்பையும் நாடு முழுதும் கொண்டு சேர்க்கும் வகையில், பிரசாரம் மேற்கெள்ளப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய கீதத்திற்கு நிகரான அந்தஸ்த்தை பெற்றுள்ள வந்தே மாதரம் பாடலை, காங்கிரஸ் கட்சி அவமதித்தை ஏற்க முடியாது. நாட்டின் விடுதலைக்காக நடந்த போராட்டத்தில் வந்தே மாதரம் பாடல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இந்த பாடலின் ஆறு பத்திகளையும் முழுமையாக பாட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சிலரை திருப்திபடுத்த, காங்கிரஸ் முதல் 2 பத்திகளை மட்டுமே பாடியது. இதுவே நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தது. காங்கிரஸ் மீண்டும் அதே தவறை செய்கிறது. இதை பாஜ வன்மையாக கண்டிக்கிறது. நாட்டின் கவுரவத்தை வலியுறுத்தும் வந்தே மாதரம் பாடலில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. வந்தே மாதரம் பாடலை நாடு முழுதும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அந்த பாடலின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜ நிறைவேற்றிய தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், பாஜ தலைமையகத்திற்கு வந்த பிரதமர் மோடி, புதிதாக தேர்வான நிர்வாகிகளை சந்தித்தார். புதிய நிர்வாகிகள் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்.

ஆக 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை