திருவனந்தபுரத்தில் பாஜ வென்ற பரபரப்பு பின்னணி BJP won | kerala election | BJP won Thiruvananthapuram
ேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தாலும், முதல் முறையாக அந்த மாநிலத்தில் ஒரு மாநகராட்சியை பாஜ கைப்பற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தையே பாஜ தட்டி தூக்கி இருப்பது தான் இப்போது டாக் ஆப் தி நேஷனல் ஆகி இருக்கிறது. திருவனந்தபுரத்தில் மொத்தம் 101 வார்டுகள். இதில் 50 வார்டுகளில் பாஜவின் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணிக்கு 29 இடமும், காங்கிரஸ் கூட்டணிக்கு 19 இடமும் கிடைத்துள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடத்தில் வென்றுள்ளனர். ஒரு வார்டில் வேட்பாளர் இறந்ததால், அதற்கு ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 50 இடங்களில் வென்ற பாஜ, மற்ற 2 சுயேச்சை வேட்பாளர்கள் உதவியுடன் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றுகிறது. கேரள அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநகராட்சியை கைப்பற்றி சாதனையை படைத்ததோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாம்ராஜ்யத்துக்கும் பாஜ முடிவு கட்டி இருக்கிறது. கொஞ்சநஞ்சமல்ல, 45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கையில் தான் திருவனந்தபுரம் மாநகராட்சி இருந்தது. கம்யூனிஸ்ட்டின் மிகப்பெரிய கோட்டையையே பாஜ தட்டி தூக்கி விட்டது. கேரளா முழுதும் பெரும்பான்மை இடங்களை வென்ற காங்கிரசாலும் திருவனந்தபுரத்தில் பாஜவின் வெற்றியை தடுக்க முடியவில்லை. பாஜவின் இந்த இமாலய வெற்றிக்கு பின்னால் 7 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பதை பார்க்கலாம். முதல் விஷயம் பாஜவின் தன்னம்பிக்கை. பாஜவால் காலூன்றவே முடியாது என்று சொன்ன இடம் கேரளா. இந்த வரலாற்றை மாற்ற பாஜ தீவிர முயற்சியில் இறங்கியது. குறிப்பாக தலைநகரான திருவனந்தபுரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியது. மற்ற இடங்களை விட அங்கு பாஜ வேகமாக வளர ஆரம்பித்தது. திடுதிப்பென இந்த வெற்றி கிடைக்கவில்லை. பாஜவின் கடின உழைப்பால் 2016ல் நேமம் தொகுதியில் பாஜ வென்றது. இதுதான் கேரளாவில் பாஜவுக்கு கிடைத்த முதல் சட்டசபை தொகுதி. இது திருவனந்தபுரம் மாநகராட்சி எல்லைக்குள் தான் வருகிறது. இந்த வெற்றி திருவனந்தபுரம் பாஜவுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. விளைவு, கடந்த மாநகராட்சி தேர்தலில் பாஜ கணிசமான இடங்களை கைப்பற்றி 2ம் இடம் பிடித்தது. மாநகராட்சியின் பிரதான எதிர்கட்சியே பாஜ தான். இப்படி தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வந்த பாஜவுக்கு இந்த தேர்தலில் மக்கள் ஏகோபத்திய ஆதரவு கொடுக்க, இலக்கை எட்டிப்பிடித்து விட்டது. #BJPWonInKerala #NDAWonThiruvananthapuram #KeralaLocalBodyElection #BJPvsLDF #KeralaPolitics #Election2023 #LocalBodyPolls #NDAInKerala #BJPVictory #ThiruvananthapuramElections #PoliticalShowdown #KeralaElections #BJPLeadership #LDFChallenge #PoliticalUnity #VoteForChange #DemocracyInAction #TraditionVsChange #GrassrootsElections #ThiruvananthapuramVictory