உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு: போட்டி போடும் கட்சிகள்! Rajinikanth | DMK | BJP | TN Election 2026

ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு: போட்டி போடும் கட்சிகள்! Rajinikanth | DMK | BJP | TN Election 2026

சட்டசபை தேர்தலில், நடிகர் ரஜினியின் ஆதரவை பெற, தி.மு.க மற்றும் பா.ஜ தரப்பில் இருந்து முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ரஜினி, தன் அரசியல் பிரவேசத்துக்காக, ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக, 2018ல் மாற்றினார். அதன்படி, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அரசியலுக்கு ரஜினி வராவிட்டாலும், அவரது அமைப்பு இன்னமும் வலுவாக உள்ளது. அதில், 40 லட்சம் பேர் செயல்பாட்டில் உள்ளனர். இந்த ஓட்டுகளை தங்களுக்கு சாதகமாக்க, தி.மு.க. தரப்பில் முயற்சி நடக்கிறது. சமூக வலைதளங்களில், ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால், ரஜினி ரசிகர்கள், விஜய் மீது கோபத்தில் உள்ளனர். அதை தங்களுக்கு சாதகமாக்க, தி.மு.க. தரப்பு முயற்சிக்கிறது. அதன்படி தி.மு.க. மேலிட குடும்பத்தில் உள்ள முக்கியமான தயாரிப்பாளர் வழியாக, ரஜினியிடம் முதற்கட்ட பேச்சு நடந்துள்ளது. இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் உள்ள நடிகர் கமலும், ரஜினியும் பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து, ஒரு படம் நடிக்க உள்ளனர்.

பிப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !