உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே வேட்புனு தாக்கல் செய்த பாஜ நிர்வாகி | BJP | Nomination

வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே வேட்புனு தாக்கல் செய்த பாஜ நிர்வாகி | BJP | Nomination

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ், தவெக, நாம் தமிழர் என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்று. எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருந்த பாஜ வேட்பாளர் பட்டியல், நேற்று வெளியானது. தஞ்சை தொகுதியில் வேட்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே மார்ச் 30ம் தேதி தஞ்சை தெற்கு மாவட்ட பாஜ துணைத்தலைவர் முரளிதரன், நான் தான் பாஜ வேட்பாளர் எனக்கூறி தன்னிச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஏப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை