/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் விவசாயிகளை சந்திக்க திட்டம்! BJP | PM Modi | Farmers Plan
விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் விவசாயிகளை சந்திக்க திட்டம்! BJP | PM Modi | Farmers Plan
பா .ஜ. வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில், விவசாயிகளை சந்தித்து மத்திய அரசு திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்ய, தொகுதிக்கு தலா 100 பேர் அடங்கிய குழுவை அக்கட்சி நியமித்துள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ. விவசாய அணியினர் கூறியதாவது: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. பயிர் காப்பீடு உட்பட பல்வேறு திட்டங்களால், விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களால், தமிழகத்தில் உள்ள பல லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக, தி.மு.க.வினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
ஏப் 06, 2026