பாஜ எம்.எல்.ஏ.,வுக்கு மும்பை மக்கள் கொடுத்த அதிர்ச்சி அனுபவம்!
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதியின் பாஜ எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பராக் ஷா. வயது 57. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். 2019 முதல் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். 2024-லும் காட்கோபர் கிழக்கில் வெற்றி பெற்றார். அப்போது, தனது வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.3,383 கோடிக்கும் அதிகம் என பராக் ஷா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தனது ஆன்மிக குருவான நம்ரமுனியின் அறிவுறுத்தலின்படி, ஒரு நாள் முழுவதும் பிச்சைக்காரர் வேடத்தில் வாழ முடிவு செய்தார்.
செப் 15, 2026