உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முன்னாள் எம்பி மீது சேர்கள் வீச்சு; பகீர் கிளப்பிய காட்சிகள் | BJP's Navneet Rana | Amravati |

முன்னாள் எம்பி மீது சேர்கள் வீச்சு; பகீர் கிளப்பிய காட்சிகள் | BJP's Navneet Rana | Amravati |

நடிகை பேசும் போது பறந்து வந்து சேர்கள்! பாஜ பிரச்சாரத்தில் சம்பவம் மகாராஷ்டிராவில் வரும் 20ல் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நெருங்குவதால் இறுதி கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது. மகாராஷ்டிராவின் அமராவதி ஹலார் கிராமத்தில் நேற்று இரவு பாஜ வேட்பாளரை ஆதரித்து பாஜ முன்னாள் எம்பியும், நடிகையுமான நவ்நீத் கவுர் ராணா பிரசாரம் செய்ய சென்றிருந்தார். அங்கு திரண்டிருந்த மக்களில் சிலர் ராணா பேசும் போது கூச்சலிட்டனர். சிலர் முஸ்லிம் மத கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. ராணாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியதால் இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ராணா அங்கிருந்து கிளம்பினார். அப்போது அந்த கும்பல் சேர்கள் வீசி தாக்குதல் நடத்தியது.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை