தமிழக அரசியலில் சீமான் இறக்கிய புது பார்முலா | Brahmin Candidates | NTK
சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி திருச்சியில் நடந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர், அதாவது 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த யாரையும் வேட்பாளராக தேர்தலில் நிறுத்துவதில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள் தான், ஒரு சில தொகுதிகளில் பிராமண சமுதாயத்தினருக்கு வாய்ப்பளித்து வருகின்றன.
பிப் 24, 2026