மாயமான பஸ்சை தேடி 2 நாளாக அலைந்த போலீஸ் | Bus | Theft | AndraPradesh
ஆந்திராவின் அனகாப்பள்ளி மாவட்டம் நர்சிப்பட்டினத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் ஞாயிறன்று இரவு அரசு பஸ்சை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். மறுநாள் டிரைவர் பஸ்சை எடுக்க வந்தபோது, பஸ் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாநிலம் முழுவதும் போலீசாரை அலர்ட் செய்தனர். பல இடங்களில் போலீசார் பஸ்சை தேடி வந்தனர். இன்று, சீதாராமராஜ் மாவட்டம் சிந்தலூரில் சாலையோரத்தில் அந்த பஸ் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்து போலீசார் பஸ்சை கைப்பற்றினர். பஸ்சை திருடி வந்த சாதிக், பஸ்சுக்குள்ளேயே தூங்கி கொண்டு இருந்தார். அவரையும் அலேக்காக போலீசார் தூக்கினர். அவரிடம் நடத்திய விசாரணையில், சாதிக் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே தனியர் பஸ் டிரைவராக பணியாற்றிய அவர், சில பிரச்னைகளால் அங்கிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருக்கிறார். அதன் பின், சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஞாயிறன்று புஷ்பா2 படம் பார்த்துவிட்டு இரவில் நர்சிப்பட்டினம் பஸ் ஸ்டாண்டில் தூக்க சென்றார். அப்போது, சாவியுடன் பஸ் நின்று இருப்பதை பார்த்து அதை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது. பஸ்சை எங்கு கொண்டு செல்ல திட்டமிட்டார். அவர் மீது ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.