/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டெல்லி தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு | CAG report | Revenue loss | Delhi liquor policy
டெல்லி தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு | CAG report | Revenue loss | Delhi liquor policy
2026 கோடி ரூபாய் இழப்பு சிஏஜி அறிக்கையில் தகவல்! மதுக்கொள்கையால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது எப்படி? டெல்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22ல் மதுக் கொள்கையில் திருத்தம் கொண்டு வந்தது. இதனால் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. சிபிஐ விசாரணைக்கு கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. ஊழல் தொடர்பாக முதல்வராக இருந்த கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது ஜாமினில் உள்ளனர். மதுக்கொள்கை தொடர்பான சிஏஜி எனப்படும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
ஜன 12, 2025