தேர்தல் பிரசாரத்தின் போது அடக்கி வாசிக்கும்படி திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு! MK Stalin | DMK | TN
அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும், தேர்தல் பிரசாரங்களில், வாய்க்கு வந்தபடி பேசி, சர்ச்சையில் சிக்கி விடாமல் அடக்கி வாசிக்குமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தி.மு.க. வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலின்போது, முதல்வராக இருந்த பழனிசாமியை இழிவுபடுத்தும் விதமாக, தி.மு.க. எம்.பி. ராஜா பேசியது சர்ச்சையானது. பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால், ராஜாவை பிரசாரத்துக்கே செல்ல வேண்டாம் என்று ஸ்டாலின் கூறும் அளவுக்கு நிலைமை மோசமானது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் உதயநிதி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது தேசிய அளவிலான சர்ச்சையாக வெடித்தது. நாடு முழுதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அமைச்சராக இருந்த பொன்முடி, தி.மு.க. அரசின் மகளிர் விடியல் பேருந்து திட்ட பயனாளிகளான பெண்களிடம், ஓசி பஸ் என்று பேசி எதிர்ப்பை சம்பாதித்தார். #MKStalin #DMK #TNElection #Campaign #ExMinisters #TamilNadu #Politics #Election2023 #DMKCampaign #StalinForChange #PoliticalLeader #TamilPolitics #ElectionUpdates #VoteDMK #Leadership #StateElection #PoliticalRally #GrassrootsCampaign #ElectoralFight