/ தினமலர் டிவி
/ அரசியல்
/ லாரி இடித்ததில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள் | Car Accident | Dinamalar
லாரி இடித்ததில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள் | Car Accident | Dinamalar
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில், 19ம் தேதி நடக்கும் விழாவில் முதல்வர் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஆய்வு செய்து விட்டு காரில் திரும்பி கொண்டு இருந்தார். சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கமிஷனரின் வாகனம் நின்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரியின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து கமிஷரின் வாகத்திற்கு பின்னால் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது.
ஏப் 07, 2025