அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்ட உத்தரவு mk stalin| cauvery| Karnataka| CWRC
இம்மாத இறுதி வரை தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி தண்ணீர் திறந்து விட வேண்டுமென, கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று கமிட்டி பரிந்துரைத்தது. ஆனால், தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா சொல்லியிருந்தார். அதன்பின், நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். தமிழகத்திற்கு 1 டிஎம்சி தண்ணீர் தரமுடியாது 8000 கனஅடி நீர் தான் திறக்க முடியும் என முடிவெடுத்தனர். இதற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகா அரசுக்கு முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டுதான் CWRC எனப்படும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு இம்மாத இறுதிவரை தினமும் 1 டிஎம்சி காவிரி நீர் வழங்க உத்தரவிட்டது.