4 மாவட்டங்களில் சிபிஐ நடத்திய சோதனை | CBI Raid | Chennai | Dinamalar
சென்னை துறைமுகத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பழைய இயந்திரங்கள் கழிவு செய்யப்பட்ட இரும்பு பொருட்கள் கடந்த 2019-2020ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. அப்போது துறைமுகத்தின் இணை இயக்குநராக இருந்த புகழேந்தி, குறைந்த விலைக்கு டெண்டர் விட்டு துறைமுக நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. டெண்டர் விட, புகழேந்தி 70 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அத்துடன் துறைமுக அதிகாரிகள் பிறப்பித்ததாக போலி உத்தரவை தந்ததாகவும் கூறப்படுகிறது.
நவ 27, 2024