ஜார்கண்ட் அரசியலில் ஏற்படப்போகும் மாற்றம் | Champai soren | Returns to jharkhand | Hemant Soren
எனது வாழ்வில் புதிய அத்தியாயம் அடித்து சொல்லும் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் ஜனவரியில் கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வர் பொறுப்பை ஏற்றார். கட்சியையும், ஆட்சியையும் சம்பாய் வழிநடத்தினார். பார்லிமென்ட் தேர்தல் பிரசாரமும் ஜார்க்கண்டில் அவர் தலைமையில் தான் நடந்தது. அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன், தான் மீண்டும் முதல்வர் ஆவதற்காக சம்பாய் சோரனை ராஜினாமா செய்யச் சொல்லி விட்டார். இது தொடர்பான கட்சி கூட்டங்களில் சம்பாய் அவமதிக்கப்பட்டதாக தெரிகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சம்பாய் கடும் அதிருப்தியில் இருப்பதாக, சில வாரங்களாக தகவல் வெளியானது. இந்த சூழலில் தான் அவர் டில்லியில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முகாமிட்டார். சம்பாய் சோரன் பாஜவில் இணைவதாக தகவல் பரவியது. அதை உறுதி செய்யும் வகையில் அவரது அறிக்கையும் அமைந்திருந்தது. அதில், தான் அவமதிக்கப்பட்டதாகவும், தனது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதாகவும், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, புது கட்சி தொடங்குவது அல்லது வேறு கட்சியில் இணைவது என 3 சாய்ஸ் வைத்திருப்பதாக கூறி அதிரடி கிளப்பி இருந்தார்.