உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெக நிர்வாகிகள் கைதால் ஐகோர்ட்டுக்கு போன ஆனந்த் | Chennai air show | Dmk | TVK | Karur Stampede

தவெக நிர்வாகிகள் கைதால் ஐகோர்ட்டுக்கு போன ஆனந்த் | Chennai air show | Dmk | TVK | Karur Stampede

விஜய் கைது செய்யப்படுவாரா..! சென்னை சம்பவத்தில் யார் கைது? பொங்கி எழுந்த தவெக வழக்கறிஞர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் நெரிசலில் சிக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தவக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாளாக கரூர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, மதியழகனை நேற்று கைது செய்தனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கரூர் தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் என்பவரையும் இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் அவர்கள் இருவரும் முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுவில் ஆனந்த் கூறியிருப்பதாவது; கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை. போலீஸ் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டனர். அரசு தன் தோல்வியை மறைக்க எங்கள் மீது வழக்கு பதிந்துள்ளது. விஜய் பிரசாரம் செய்ய சரியான இடத்தை ஒதுக்கி தரவில்லை. இந்த வழக்கில் போலீஸ் கைது செய்யக்கூடும் என்பதால் எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என ஆனந்த் மனுவில் கூறியுள்ளார். இவர்களின் முன்ஜாமின் மனுக்களை ஐகோர்ட் மதுரை கிளை வரும் 3 ம்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவிருக்கிறது.

செப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி