வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சென்னை பசுமைவழிச் சாலையில் இருமருங்கிலும் போடப் பட்டிருந்த நூறாண்டுகள் உழைக்கக்கூடிய கிரானைட் கற்களைப் பெயர்த்து எடுத்து விட்டு சிமென்ட் காரைப் போட்டிருக்கிறார்கள். ஒரு மழைக்குத் தாங்காது. அநியாயம்.
திமுக ஆட்சியில் போடப்பட்ட ₹284 கோடி டெண்டர் ரத்து | Chennai Corporation Tender Cancelled | 284 Crore
சென்னை மாநகராட்சியில் வெவ்வேறு வார்டுகளில் நடைபாதை அமைக்க கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. பிப்ரவரி 19ம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இதற்கான நிதி அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே இதற்கான டெண்டர்கள் அவசர அவசரமாகக் கோரப்பட்டன. மார்ச் 15ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்குச் சில நாட்களுக்கு முன்பாக, இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், இறுதி பணி ஆணை மட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இந்த திட்டம் மொத்தம் 35 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுப்பிற்கும் தலா 8 முதல் 9 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
சென்னை பசுமைவழிச் சாலையில் இருமருங்கிலும் போடப் பட்டிருந்த நூறாண்டுகள் உழைக்கக்கூடிய கிரானைட் கற்களைப் பெயர்த்து எடுத்து விட்டு சிமென்ட் காரைப் போட்டிருக்கிறார்கள். ஒரு மழைக்குத் தாங்காது. அநியாயம்.