உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜனசேனா பெண் நிர்வாகி உட்பட 5 பேர் சிக்கிய பரபரப்பு பின்னணி | Chennai Police

ஜனசேனா பெண் நிர்வாகி உட்பட 5 பேர் சிக்கிய பரபரப்பு பின்னணி | Chennai Police

சென்னை கூவம் ஆற்றின் அருகே கடந்த 8 ம் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. ஏழுகிணறு போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதனால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. இறந்தவரின் கையில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவின் கொடி சின்னம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. வினுதா என்ற பெயரும் இருந்தது. அது பற்றி போலீசார் விசாரித்ததில், இறந்தவர் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீனிவாசலு என்பது தெரிந்தது. காளஹஸ்தி சட்டசபை தொகுதியின் ஜனசேனா பொறுப்பாளர் வினுதாவின் டிரைவராக இருந்ததும் தெரியவந்தது.

ஜூலை 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ