/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உங்களுடன் ஸ்டாலின் சர்ச்சை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு | ChennaiHC | ADMK | Ungaludan Stalin
உங்களுடன் ஸ்டாலின் சர்ச்சை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு | ChennaiHC | ADMK | Ungaludan Stalin
மக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பி சண்முகம், வக்கீல் இனியன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனி தனியே பொதுநல மனு தாக்கல் செய்தனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம்பெற்றுள்ளது. அதில் முன்னாள் முதல்வா் கருணாநிதி, தற்போதைய முதல்வா் ஸ்டாலின் படங்களும் இடம்பெற்றுள்ளன. இது சுப்ரீம் தீா்ப்புக்கு முரணானது. தனிமனித சாதனையை போல அரசு திட்டத்தை விளம்பரப்படுத்துவது தவறானது.
ஆக 01, 2025