/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது 3 வயது சிறுமிக்கு சோகம் | Dharmapuri | Palacode School
பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது 3 வயது சிறுமிக்கு சோகம் | Dharmapuri | Palacode School
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை காமராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பல இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும், ஊர் மக்களும் கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர்.
ஏப் 28, 2026