உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டில்லி போராட்டக்காரர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு: போராட்டம் நடத்த கோர்ட் தடை | CJP leaders

டில்லி போராட்டக்காரர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு: போராட்டம் நடத்த கோர்ட் தடை | CJP leaders

சிஜேபி நிர்வாகிகள் நிபந்தனையுடன் விடுவிப்பு ஓராண்டுக்கு போராட்டம் நடத்த தடை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள், சில பத்திரிக்கைகள் எழுப்பிய குற்றச்சாட்டை அடுத்த, அவர் பதவி விலகக் கோரி, டில்லியில், சிஜேபி எனப்படும் கரப்பான்பூச்சி கட்சி அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிஜேபி தலைவர் அபிஜித், நிர்வாகிகள் சவுரவ் தாஸ், ரத்னா சிங், அசுதோஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். டில்லி முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. போராட்டத்தில் பங்கேற்க வந்த சிஜேபி ஆதரவாளர்கள் பலர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள், டில்லியில் உள்ள நிர்வாக மாஜிஸ்திரேட் முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில், தலா 50 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையுடன் விடுவிக்கப்பட்டனர். நிபந்தனைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால், உடனடியாக கைது நடவடிக்கை பாயும் எனவும், நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அக் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !