உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வெள்ளை அறிக்கையில் புட்டு புட்டு வைத்த சந்திரபாபு | CM Chandrababu naidu | Released white paper

வெள்ளை அறிக்கையில் புட்டு புட்டு வைத்த சந்திரபாபு | CM Chandrababu naidu | Released white paper

ஜெகன் மோகன் ஆட்சியில் காணாமல் போன கனிமங்கள் நிச்சயம் தண்டிப்போம் ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இயற்கை வளங்களை சுரண்டியதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் இயற்கை வளம் சுரண்டப்பட்டது தொடர்பாக அமராவதி தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு வெள்ளை அறிக்கை வெளியிட்டார். ஜெகன் மோகன் ஆட்சியில் நிலங்கள், கனிமங்கள், வனச் செல்வங்கள் சூறையாடப்பட்டதாக அப்போது அவர் கூறினார். விசாகப்பட்டினம், ஓங்கோல், திருப்பதி, சித்தூர் மற்றும் மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் நில அபகரிப்புகள் நடந்தன. 26 மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அலுவலகம் கட்ட தலா 2 ஏக்கர் நிலம் என 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 33 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய் வீதிம் குத்தகைக்கு ஒதுக்கீடு செய்து கொண்டனர். நில உரிமைச் சட்டம் என்ற பெயரில் நிலத்தை அபகரிக்க சதி செய்தனர். விசாகப்பட்டினத்தில் மட்டும் 4469 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்தனர். திருப்பதி மாவட்டத்தில் 270 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்துள்ளனர். கிராமங்களில் உள்ள காலி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !