/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கொட்டும் கனமழையால் கபினி அணையில் நீர் திறப்பு: தமிழகம் நோக்கி பாயும் காவிரி | KABINI RESERVOIR
கொட்டும் கனமழையால் கபினி அணையில் நீர் திறப்பு: தமிழகம் நோக்கி பாயும் காவிரி | KABINI RESERVOIR
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை, கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மொத்தம் 65 அடி உயரமுள்ள அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,565 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணை முழுதும் நிரம்ப இன்னும் 3 அடி மட்டுமே உள்ளது.
ஆக 01, 2026