/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நண்பர்கள் மீது உதயநிதி கடும் அதிருப்தி Udhayanidhi | DMK Seniors | Friendship
நண்பர்கள் மீது உதயநிதி கடும் அதிருப்தி Udhayanidhi | DMK Seniors | Friendship
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதானபோது, அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அனைவரும் தெறித்து ஓடியதாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூறினர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: திமுக இளைஞரணி செயலராக உதயநிதி நியமிக்கப்பட்டது முதல் தற்போது வரை, அவரை கட்சி நிர்வாகிகளால் எளிதில் அணுக முடியாது. அவருக்கு கார்த்தி, தம்பி பாஸ் என்ற ரத்திஷ், சுஜய், வெங்கட் என பெரிய நட்பு வட்டம் உள்ளது. இந்த வட்டத்தில், முன்னாள் அமைச்சர் மகேசும் உண்டு. இவர்களுடன் தான், உதயநிதி எப்போதும் நேரத்தை செலவழிப்பார். துணை முதல்வரான போதும், இந்த பழக்கத்தை மாற்றவில்லை.
ஆக 06, 2026