/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோவை என்ன பாகிஸ்தானிலா உள்ளது: நீதிபதி சரமாரி கேள்வி! Bjp | covai | Nataional flag Rally | chennai
கோவை என்ன பாகிஸ்தானிலா உள்ளது: நீதிபதி சரமாரி கேள்வி! Bjp | covai | Nataional flag Rally | chennai
சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் பாஜ சார்பில் தேசிய கொடியுடன் பேரணி செல்ல போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு போலீஸ் அனுமதி தரவில்லை. இதை எதிர்த்து கோவை மாவட்ட பாஜ தலைவர் ரமேஷ்குமார் சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பாஜ அனுமதி கேட்ட பகுதி கோவையின் பிரதான சாலையில் உள்ளது. அங்கு பள்ளி, கல்லூரிகள், பஸ் நிறுத்தம் இருப்பதால் மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆக 14, 2026