உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மேகமலை மக்களுக்காக குரல் கொடுக்கும் அண்ணாமலை | Annamalai | Meghamalai Issue

மேகமலை மக்களுக்காக குரல் கொடுக்கும் அண்ணாமலை | Annamalai | Meghamalai Issue

வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள 14 ஊராட்சிகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். விவசாயம், தோட்டத் தொழில், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இவர்களின் வாழ்க்கை, வன பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. பட்டா வைத்துள்ள விவசாயிகளுக்கு கூட தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதில் தடைகள் ஏற்படுவதாகவும், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் விவசாய விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சோதனைச் சாவடிகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆக 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !