/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துடி துடித்த தவெக நிர்வாகி: சென்னை அடையாறில் நள்ளிரவில் பயங்கரம் | TVK Functionary | Adyar Chennai
துடி துடித்த தவெக நிர்வாகி: சென்னை அடையாறில் நள்ளிரவில் பயங்கரம் | TVK Functionary | Adyar Chennai
சென்னை அடையாறு அடுத்த வண்ணாந்துறையை சேர்ந்தவர் கண்ணன், வயது 45. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதிமுகவில் வட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த இவர், சில மாதங்களுக்கு முன் தவெகவில் இணைந்தார். சனிக்கிழமை இரவு வெளியே சாப்பிட சென்றவர், அங்கிருந்து ராமசாமி அவின்யூவில் உள்ள அவரது அலுவலகத்துக்கு போனார். அப்போது கண்ணன் செல்லும் வழியை நோட்டமிட்ட கும்பல், அலுவலக வாசலில் சுற்றி வளைத்தது. இரண்டு பைக்குகளில் வந்த 6 பேர், அவரை ஓட ஓட துரத்தி சென்று வெட்டினர். கும்பல் தலையில் குறி வைத்து வெட்டியதால் கண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
செப் 06, 2026