மாநில கட்சி தலைவர்களை சந்திக்கும் திமுக எம்.பி கனிமொழி
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகளே உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம் பிடித்தது. இதனால், தேசிய அளவில் இண்டி கூட்டணியில் இருந்து திமுக விலகியது. இந்த சூழலில், பாஜ, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் மாற்றாக, மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 3வது அணி அமைக்கும் முயற்சியில் தி.மு.க ஈடுபட்டுள்ளது. இதற்காக திமுக எம்.பி. கனிமொழி, முக்கிய மாநில கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். முதலில் மும்பை சென்ற கனிமொழி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
செப் 18, 2026