/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சமூக நலத்துறையின் முடிவுக்கு எதிராக கொதிக்கும் பொதுப்பணித்துறை Thozhi Hostel | PWD vs Social Welfare
சமூக நலத்துறையின் முடிவுக்கு எதிராக கொதிக்கும் பொதுப்பணித்துறை Thozhi Hostel | PWD vs Social Welfare
அரசு சார்பில் நகரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு குறைந்த விலையில் தோழி என்ற தங்கும் விடுதிகள் நடத்தப்படுகின்றன. 20 மாவட்டங்களில் உள்ள 25 விடுதிகளில் 2,300க்கும் அதிகமான பெண்கள் தங்கி உள்ளனர். 14 மாவட்டங்களில் விடுதிகள் கட்ட ஏற்பாடு நடக்கிறது. இதை தாங்களே கட்டிக்கொள்ள அரசிடம் சமூக நலத்துறை விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறியதாவது: எந்த துறையாக இருந்தாலும் அரசுக்கு தேவையான கட்டடங்களை பொதுப்பணி துறை தான் டெண்டர் வெளியிட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்.
அக் 06, 2026