மீனவ கிராமங்களுக்கு அழைப்பு? பட்டினம்பாக்கம் தான் இறுதி | New Secretariat Project | Fishermen
சென்னையில் 1,200 கோடி செலவில் புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக வளாகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். இதற்காக, பட்டினம்பாக்கத்தில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் தலைமை செயலகம் அமைத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதி மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயலகம் வந்தால் மீனவர்களின் பாரம்பரிய தங்குமிடங்கள், படகுகள் மற்றும் வலைகளை நிறுத்தும் இடங்கள், மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என்கின்றனர். மீனவர்களின் தொடர் போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டபடி பட்டினம்பாக்கத்திலேயே தலைமை செயலகத்தை அமைக்க தவெக அரசு தீவிரமாக உள்ளது. மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டு ஒரு சுமூகமான தீர்வை எட்ட அரசு பேச்சுவார்த்தை வழியை தேர்ந்தெடுத்துள்ளது.