வாடகை வீட்டில் வசிக்கும் கோவை மேயர் வேட்பாளர் | coimbatore corporation | coimbatore mayor
மேயர் ஆகும் குஷியில் ரங்கநாயகி அழுதபடி சென்றார் மீனாலோகு! கோவை மேயர் தேர்தல் கோவை மாநகராட்சி மேயராக இருந்த 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா கடந்த மாதம் பதவியை ராஜினாமா செய்தார். திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்களுடன் மோதல் போக்கு, பார்லிமென்ட் தேர்தல் பணியில் திருப்தியின்மை, கணவர் ஆனந்தகுமாரின் தலையீடு என அடுத்தடுத்து வந்த புகார்கள், சர்ச்சைகளால், அவரை ராஜினாமா செய்ய கட்சித்தலைமை சொன்னதாக கூறப்பட்டது. புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேயர் பதவியை கைப்பற்ற பெண் கவுன்சிலர்கள் சிலர் கட்சி உயர்மட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள் மூலம் காய்நகர்த்தினர். அதில், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. இச்சூழலில், புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் கோவையில் நடந்தது. கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.