20 குழந்தைகள் மரணம் தமிழக அரசே பொறுப்பு Coldrif Syrup | MP Minister
மத்திய பிரதேசத்தில் நச்சுத்தன்மை மிகுந்த coldrif கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் இறந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த மருந்தை காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் மருந்து கம்பனி தயாரித்தது தெரியவந்தது. மத்திய பிரதேச சுகாதார துறை அதிகாரிகள் இங்கு வந்து வந்து ஆய்வு நடத்தினர்.
அக் 09, 2025