ராகுல் செயல்பாடு: காங்கிரசில் கடும் அதிருப்தி | Congress | Maharashtra Haryana elections | Rahul
சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் நமக்குத்தான் வெற்றி என காங்கிரசார் மிகப்பெரிய அளவுக்கு நம்பினார்கள். அரியானாவில் முதல்வர் பதவிக்கு போட்டா போட்டி போடத் துவங்கினார்கள். 2 மாநிலங்களிலும் தீவிரமாக பிரசாரம் செய்தார் ராகுல். எங்கு சென்றாலும், கையில் ஒரு சிறிய சட்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு, மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒழிக்கப் பார்க்கிறார் என, பிரசாரம் செய்தார். இன்னொரு பக்கம், அதானியும், மோடியும் நண்பர்கள்; அதானியிடம் நாட்டை தாரை வார்த்து விட்டார் மோடி எனவும் பிரசாரம் செய்தார் ராகுல். ஆனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் படுதோல்வியடைந்தது காங்கிரஸ்; ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் வெற்றி கிடைத்தது. ஆனால், அங்கும்கூட காங்கிரஸ் தனித்து வெற்றிபெறவில்லை. அதன் கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாதான் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.