உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகார் தேர்தல் முடிவு எதிரொலி: தலைமை தேர்தல் கமிஷனர் மீது பழி போடும் காங்கிரஸ் | Congress

பீகார் தேர்தல் முடிவு எதிரொலி: தலைமை தேர்தல் கமிஷனர் மீது பழி போடும் காங்கிரஸ் | Congress

பீகார் சட்டசபை தேர்தலில் ஞானேஸ் குமார் முந்துகிறார்! காங்கிரஸ் பர்ஸ்ட் ரியாக்சன் பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 12 மணி நிலவரப்படி, பாஜ - ஜேடியு கூட்டணி 190 இடங்களை தாண்டி முன்னிலை வகிக்கிறது. ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில், பீகாரில் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இண்டி கூட்டணியில், ஆர்ஜேடி 33 இடங்களில் முன்னணி வகிக்கும் நிலையில், காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்து. இந்நிலையில், முதற்கட்ட முன்னணி நிலவரங்கள் வெளியான நிலையில், இது தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ் குமாரின் வெற்றி என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது: நான் அரசியல் கட்சிகளைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. பீகார் மக்களுக்கும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ் குமாரும் இடையே நடந்த போட்டியில், ஞானேஸ்குமார் முன்னிலை வகிக்கிறார். பீகார் மக்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடைமுறை, ஓட்டுத் திருட்டு என பலவற்றையும் கடந்து மக்கள் ஓட்டளித்துள்ளனர். அவர்களின் விருப்பத்தை பதிவு செய்துள்ளனர். முதல் கட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரங்களின் படி, ஞானேஸ் குமார் முன்னிலை வகிக்கிறார். இது முடிவல்ல. இன்னும் பல கட்ட ஓட்டு எண்ணிக்கை உள்ளது. இறுதியில் யார் வெற்றி பெறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார். தேர்தல் சமயத்தில் ஓட்டுத் திருட்டு என புகார் கூறி வந்த காங்கிரஸ், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகளை நீக்கும் தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்த்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் மீது நேரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை