உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் மதிக்காததால் அதிருப்தி | Congress| Delhi election| haryana result

கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் மதிக்காததால் அதிருப்தி | Congress| Delhi election| haryana result

காங்கிரசை கழற்றி விடும் இண்டி கூட்டணி கட்சிகள்! டெல்லியில் AAP தனித்து போட்டி ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கு, அதீத நம்பிக்கையும் பிடிவாத குணமும்தான் காரணம் என கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. மகாராஷ்டிரா தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது. உத்தவ் தாக்ரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க உள்ளது. இந்நிலையில் உத்தவ் தரப்பின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில், காங்கிரசை விமர்சித்து தலையங்கம் வெளியிடப்பட்டது. அதில், ஆம் ஆத்மி போன்ற கூட்டணி கட்சிகளுக்கு இடமளிக்காதது; உள்ளூர் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியது போன்றவற்றால் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. எளிதாக ஜெயிக்க வேண்டிய போட்டியில்கூட தோல்வி அடையும் திறன் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. உத்தவ் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, காங்கிரஸ் தங்களை பெரிய ஆளாக நினைத்திருக்க கூடாது. சமாஜ்வாதி, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்திருந்தால் தேர்தல் முடிவு மாறியிருக்கும். இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். திரிணமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோக்லே கூறும்போது, காங்கிரசின் அணுகுமுறை தேர்தல் தோல்விகளுக்கு வழிவகுக்கிறது என்றார்.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை