வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வைக்கோ ஒரு டிமாண்டும் இல்லை என்று பகிரங்க அறிக்கையயை விட்டுடிச்சி. அதனால் து சட்ட அபைய்ய தேர்தலில் ஓடுங்கி ஸ்டாலின் மௌத் பீஸாக ஆக வேலை செய்யும். ஒ
கேரளாவை சுட்டிக் காட்டி திமுகவுக்கு செக் வைக்கும் காங்கிரஸ்:
தமிழகத்தில் வரும் ஏப்ரல் - மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அதிமுக - பாஜ கூட்டணி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அன்புமணி தலைமையிலான பாமகவும் அதில் இணைந்துள்ளது. ஏற்கனவே தமாகா அந்த கூட்டணியில் உள்ள நிலையில், மேலும் சில கட்சிகளை தேஜ கூட்டணியில் இணைக்கும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த நிலையில், திமுக கூட்டணியில் மிக நீண்ட காலமாக அங்கம் வகிக்கும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், சமீப காலமாக ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை அடிக்கடி முன்வைத்து பேசத்துவங்கி உள்ளன. விசிக தலைவர் பல மேடைகளில் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதும், பின் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின், அது எங்கள் நீண்ட கால லட்சியம், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என பல்டி அடிப்பதும் வாடிக்கையாக உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அடிக்கடி அதிகாரப் பகிர்வு குறித்து வாய்விட்டாலும், கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, திமுகவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறார். #CongressDMKcoldwar| TNPolitics| Congress| DMK| DMKAlliance| ManickamTagore
வைக்கோ ஒரு டிமாண்டும் இல்லை என்று பகிரங்க அறிக்கையயை விட்டுடிச்சி. அதனால் து சட்ட அபைய்ய தேர்தலில் ஓடுங்கி ஸ்டாலின் மௌத் பீஸாக ஆக வேலை செய்யும். ஒ