தமிழகம் முழுதும் அலசி ஆராய்ந்தது சொத்து பாதுகாப்பு குழு | TN Congress | Congress Party Assets | Rahu
தமிழக காங்கிரஸ் கட்சி மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமாக தமிழகம் முழுதும் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இவற்றை மீட்டு அகில இந்திய காங்கிரஸ் கணக்கில் சேர்க்க முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தலைமையில் 31 பேர் கொண்ட குழுவை தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை நியமித்தார். தமிழக காங்கிரசுக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் சேர்த்து வைத்த சொத்துகளின் இன்றைய சந்தை மதிப்பு 4,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு மட்டும் 2,000 கோடி என கருதப்படுகிறது. இது தவிர அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இவை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை ஆய்வு செய்து மூன்று மாதத்தில் அறிக்கை அளிக்க மே மாதம் அகில இந்திய காங்., சொத்து பாதுகாப்பு குழு தலைவர் விஜய் இந்தர் சிங்கலா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தங்கபாலு தலைமையில் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர் தமிழகம் முழுதும் முதல் கட்ட ஆய்வு பயணத்தை நேற்று நிறைவு செய்தனர். இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டன. 200க்கும் மேற்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றது. #TNCongress | #CongressPartyAssets | #Rahul | #CongressAssets | #Selvapperundhaga