உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது | Congress Resignation | Shakeel Ahmad

போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது | Congress Resignation | Shakeel Ahmad

பீகார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஓட்டு திருட்டு, இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு என அடுக்கடுக்கான புகார் கூறிய ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியானது, அடிமட்டத் தொண்டர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கட்சி செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷக்கீல் அகமது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். பீகார் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட யுக்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தன. #VoteRigging #EVMSaga #CongressInternal #RahulGandhi #ShakeelAhmed #BiharElections #GrandAlliance #ElectionFraud #PartyResign #IndianPolitics

நவ 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ