/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பார்லி வர மோடி அச்சம் ராகுல் கடும் தாக்கு | Loksabha | Parliment | Congress
பார்லி வர மோடி அச்சம் ராகுல் கடும் தாக்கு | Loksabha | Parliment | Congress
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பார்லிமெண்ட் வளாகத்தில் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. லோக்சபா எதிர்கட்சி த லைவர் ராகுல் தலைமையில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பிரியங்கா உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் தரையில் அமர்ந்து, செங்கல் அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார் 12, 2026