உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / யாருடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் திமுக கூட்டணி வெல்வது உறுதி: வைகோ நம்பிக்கை

யாருடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் திமுக கூட்டணி வெல்வது உறுதி: வைகோ நம்பிக்கை

தமிழக தேர்தல் கள நிலவரம், மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து துாத்துக்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்தார். தமிழகத்தில், பல ஆண்டுகளாகவே பாலியல் வன்கொடுமை, கொலை நடக்கிறது. இதுபோன்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகள், ஆயுள் முழுதும் சிறையில் இருக்கும் வகையில், புதிய சட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். துாத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலையை அரசியலாக்கி, தி.மு.க., மீது பழி சுமத்த சிலர் நினைக்கின்றனர். யார், யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் சரி; புதிதாக உருவான கட்சி என்டிஏ கூட்டணிக்கு சென்றாலும் சரி; வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும். வரும் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை. தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஒரு சதவீதம் கூட, எனக்கு கிடையாது. இதை, ஏற்கெனவே கூறிவிட்டேன். சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது விரைவில் தெரிய வரும்.

மார் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !