கேரளாவை சேர்ந்தவருக்கு சீட் வழங்குவதா? காங்கிரஸ் நிர்வாகிகள் கொந்தளிப்பு |TN Congress | vilavancode
கேரள சிஎஸ்ஐ பிஷப் பரிந்துரையில், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் அறிவிக்கப்பட்டது, அத்தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில், விளவங்கோடு வேட்பாளராக பிரவீன் என்பவர் அறிவிக்கப்பட்டார். அத்தொகுதியில் போட்டியிட, சிட்டிங் எம்எல்ஏ தாரகை கத்பட், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் ரமேஷ்குமார் உட்பட 60 பேர் விருப்ப மனு அளித்தனர். குளச்சல் தொகுதியில், தற்போதைய எம்எல்ஏ பிரின்சுக்கு பதிலாக, தாரகை கத்பட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன், சிஎஸ்ஐ தென்னிந்திய கேரளா டயோசீசன் நிர்வாகியாக உள்ளார்.